Tuesday, March 19, 2019

இல்லறம்

இல்லறம் ஏன் என்றேன்
அன்றி ஓர் நல்லறம்
அறிந்திலன் எவனும்
உனை வழி செய்ய
உணர்ந்தவன் யான் இன்று!

திருவிளையாடல்

நீயோ உதைக்கிறாய்
கொண்டவளோ சிலிர்க்கிறாள்!

திருவிளையாடல்!

லீலை

கொண்டவளோ சிலிர்க்க
கொடுத்தவனோ கரைய!

லீலை

பசி

எத்தனை புலன்கள்
எல்லாம் அடங்கின

பசி

மலர்க்கொடி

என்னுள் படர்ந்த மலர்க்கொடி நீ
அதன் வாசத்தில் நீந்தும் ஜீவன் நான்

மாயம்

அன்றொருவன் வகுத்திட்டான்
உறவென்றும் நட்பென்றும்
அவன் கணக்கோ உனை விரிக்க
உன் எல்லை நீயல்ல
உள் நோக்கின் எல்லாம் விரியும்
மூடனவன் தன் தசையோடு தனை முடிப்பான்
உறவும் நட்பும் தன் விருந்துக் கணக்கென்பான்

மாயம்

அரசியல்

அறியாதவனாய் நீ நடிக்க
அறிந்தவனாய் அவனும் நடிக்க
எல்லாம் காற்றடைத்த பொய்யடா
குற்றமில்லை குறையுமில்லை
பிறப்பெல்லாம் நடிக்கத்தானே

அரசியல்

குறள்

விழுங்கி விழுங்கியே வாழ்வான் விழுங்கியே
அழிக்கப் படுபவன் அவன்

திருவள்ளுவர் மற்றும் பலர் மன்னிக்க

நகைச்சுவை

உறக்கம் விடுத்து
உணவை குறைத்து
உடலை ஒழித்து
மெருகேற்றினான் தன்னை
போட்டிக்கு, மன்னிக்கவும்
கல்விக்கு

நகைச்சுவை

ஆவலுடன்

மாயை ஒரு கிணறு
நீ மூழ்கி விட்டாய்
நீந்துவதாய் ஒரு மாயை
வெளிவர ஆவலா?
உணர்ந்திடு போதும்

=ஆவலுடன்