நிலவொன்றை நான் கண்டேன்
என் முழுமையும் ஒரு மயக்கம்
கனா கொண்டேன் கையில் பிடிக்க
நிலவோ என் கனவை கலைக்க
நானும் கடந்தேன் நிழலோடு
அந்த
அழகு நிலவின் நிழலோடு
ஏக்கம் என்னை வழிந்தோட
கிடந்தேன் நானும் கல்லாக
நிழல் மட்டும் என்னோடு
காலம்தான் பறந்து செல்ல
மாயமொன்று நிகழ்ந்ததிங்கே
தென்றல் ஒன்று தீண்டி செல்ல
என் நிலவின் வாசம் கையில் பிடித்தேன்
அந்த தென்றல் தூவிய என் நிலவின் வாசம்
என் முழுமையும் ஒரு மயக்கம்
தென்றலே கொஞ்சம் நெருங்கி வா
என் நிலவிடம் சொல்லிவிடு
அவள் வாசம் மட்டும் போதுமென்று
இது நம் இரகசியம்
மாயமென்ன